அயதுல்லா அலி கொமேனி பாதுாப்புடன் இடமாற்றம் : குறி வைக்கிறதா இஸ்ரேல்:
அயதுல்லா அலி கொமேனி பாதுாப்புடன் இடமாற்றம் : குறி வைக்கிறதா இஸ்ரேல்:
ADDED : செப் 28, 2024 08:22 PM

டெஹரான்: லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கோமேனி மீது இஸ்ரேல் ராணுவம் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா என்ற ஈரான் ஆதரவு படையினர் காசாவுக்கு ஆதரவாக களம் இறங்கி இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹூசைன் நஸ்ரல்லா பலியானதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் மத்ததலைவர் அயதுல்லா அலி கொமேனி, நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ஹிஸ்புல்லா அமைப்பு எந்த பாடம் கற்றுகொள்ளவில்லை என அதன் பெருமையை வலியுறுத்தி பேசினார்.
இதன் மூலம் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மத குரு அயதுல்லா அலி கொமேனி மீது குறி வைத்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை கமாண்டர் பலி
முன்னதாக இன்று (செ்ப்.,28) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படையின் துணை கமாண்டர் அப்பாஸ் நைல்பெரோஷா கொல்லப்பட்டார்.
துக்கம் அனுசரித்த ஈராக் மதகுரு
இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹூசைன் நஸ்ரல்லா மறைவுக்கு ஈராக் மத குரு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தார்.