அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அமெரிக்காவில் கொண்டாட்டம்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அமெரிக்காவில் கொண்டாட்டம்
UPDATED : ஜன 22, 2024 10:28 AM
ADDED : ஜன 22, 2024 08:37 AM

நியூயார்க்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாட, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டனர். அங்கு ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலித்த வண்ணம் இருக்கிறது.
கிட்டத்தட்ட, 500 ஆண்டுகளுக்கு முன், சீரும் சிறப்புமாக இருந்த அயோத்தி, நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.,22) பிற்பகல்12.20 மணிக்கு கோலாகமாக நடக்க உள்ளது. இதனால் அயோத்தி விழாக் கோலம் பூண்டது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண, உலக முழுவதும் உள்ள ஹிந்துகளும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ஸ்கிரினில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்பட உள்ளது.
இதனால் கொண்டாடி மகிழ ஏராளமானோர் திரண்டனர். அங்கு ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களும் உரத்த குரலில் ஒலித்தன. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.