ADDED : மே 18, 2025 03:15 AM
புதுடில்லி : ஆயத்த ஆடைகள், உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதன்படி, நவி மும்பை, நவ ஷேவா துறைமுகம் மற்றும் கொல்கட்டா துறைமுகம் வாயிலாக மட்டுமே இனி வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய முடியும். ஆனால், தரை வழியாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி, மரச்சாமான்கள் ஆகியவற்றின் தரைவழி இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன், சமையல் எண்ணெய், ஜல்லி கற்கள் ஆகிய பொருட்களுக்கு தரைவழி இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட சில வகை இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு வங்கதேசம் கடந்த மாதம் தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.