வங்கதேசம் பிப்., தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அதிபர் ஆலோசனை
வங்கதேசம் பிப்., தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அதிபர் ஆலோசனை
ADDED : டிச 11, 2025 05:38 AM

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் கடந்தாண்டு நடத்திய மாபெரும் போராட்டத்தை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்கதேச தலைமை தேர்தல் கமிஷனர் நசீர் உதீன் தலைமையிலான அதிகாரிகள், அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீனை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் தேதி விரைவல் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத் - இ - இஸ்லாமி கட்சி இடையே இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

