வங்கதேச எம்.பி., கோல்கட்டாவில் கொல்லப்பட்டது எப்படி?: தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டியவர் கைது
வங்கதேச எம்.பி., கோல்கட்டாவில் கொல்லப்பட்டது எப்படி?: தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டியவர் கைது
ADDED : மே 24, 2024 02:47 PM

கோல்கட்டா: வங்கதேச ஆளும் எம்.பி.,கோல்கட்டாவில் கொலை செய்யப்பட்டார். கொலையாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேச ஆளும் அவாமிலீக் கட்சியின் எம்.பி., அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கோல்கட்டா வருவதும் , நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே 13ம் தேதி முதல் அவரை காணவில்லை. மேலும் அவரது போனும் துண்டிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வங்கதேசத்தில் இருக்கும் உறவினர்கள் கோல்கட்டா போலீசில் புகார் அளித்தனர் .இதன்படி விசாரித்ததில் எம்.பி.,யை சிலர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கசாப் கடைக்காரர்
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மும்பை கசாப் கடையில் பணியாற்றிய ஜிகாத் ஹவல்தார் 24 என்பவரை கைது செய்தனர். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கோல்கட்டா அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர் எம்.பி., அன்வாரூலை கொன்று, தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பக்கெட்டில் நிரப்பி நகரில் பல பகுதிகளில் வீசியுள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டது.
இவருக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.