UPDATED : ஆக 05, 2024 06:04 PM
ADDED : ஆக 05, 2024 04:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாகா: வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, ராணுவ விமானம் மூலம் உ.பி.,யின் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான படை தளத்திற்கு வந்தடைந்தார்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ராணுவ ஆட்சி அமலாகி உள்ளது. ஷேக் ஹசீனா எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவர் திரிபுரா தலைநகர் அகர்தலா சென்றார். அங்கிருந்து காஸியாபாத் வந்தடைந்தார். பிறகு வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கிருந்து ஷேக் ஹசீனா லண்டன் செல்ல உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஹசீனாவின் மகள் வீடு லண்டனில் தான் இருக்கிறது.