வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு: அவாமி லீக் கட்சி தலைவர் கைது
வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு: அவாமி லீக் கட்சி தலைவர் கைது
UPDATED : ஆக 06, 2024 05:14 PM
ADDED : ஆக 06, 2024 04:31 PM

டாக்கா: வங்கதேச பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பார்லிமென்ட்டை கலைத்து அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கதேசத்தில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ஆட்சியை ராணுவம் கையில் எடுத்து உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டை கலைத்த அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜூலை 1 முதல் ஆக.,5 வரை கைதான அனைவரையும் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் விடுதலை
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இந்த முன்னாள் பிரதமர் கலிதாஜியாவை விடுதலை செய்ய அதிபர் நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கைது
ஹசீனா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், அவாமி லீக் கட்சி தலைவருமான ஜூனைத் அஹமதுவை போலீசார் கைது செய்தனர்.