வங்கி மோசடி வழக்கு: மெஹூல் சோக்சிக்கு பெல்ஜியம் கோர்ட் ஜாமின் வழங்க மறுப்பு
வங்கி மோசடி வழக்கு: மெஹூல் சோக்சிக்கு பெல்ஜியம் கோர்ட் ஜாமின் வழங்க மறுப்பு
UPDATED : ஏப் 23, 2025 07:34 AM
ADDED : ஏப் 23, 2025 12:54 AM

புதுடில்லி: ரூ. 13 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்சி, 65, க்கு அந்நாட்டு கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், ரூ. 13,000 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர். நிரவ் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு குற்றவாளியான மெஹூல் சோக்சி , வட அமெரிக்காவில் உள்ள தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். பின்னர் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தன்னை ஜாமினில் விட கோரி அந்நாட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் , சோக்சிக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.