பெலாரஸ் அமெரிக்கா மத்தியஸ்தம்; 123 கைதிகள் விடுவிப்பு
பெலாரஸ் அமெரிக்கா மத்தியஸ்தம்; 123 கைதிகள் விடுவிப்பு
ADDED : டிச 15, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்ஸ்க்: அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய நாடான பெலாரசில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், இத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.
அந்த போராட்டங்களை அதிபர் கட்டுப்படுத்தியதுடன், ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அந்நாடு மீது முதன்முதலில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையே, கைதிகளை பெலாரஸ் விடுவித்ததால், உரங்கள் மீதான தடையை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதையேற்று, 123 கைதிகளை பெலாரஸ் அரசு நேற்று விடுவித்தது.

