பீஹார் தேர்தல்: 562 கோடீஸ்வரர்கள் போட்டி; 26% மீது கிரிமினல் வழக்கு
பீஹார் தேர்தல்: 562 கோடீஸ்வரர்கள் போட்டி; 26% மீது கிரிமினல் வழக்கு
ADDED : நவ 04, 2025 10:33 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபைக்கு 2ம் கட்டமாக நடக்கும் தேர்தலில் 562 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். அதில் முதலிடத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி முதலிடத்தில் உள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 26 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்தது. 1,302 பிரமாணப்பத்திரங்களில் 1,297 பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 26 சதவீதம் பேர் அதாவது 341 பேர் மீது மிகத்தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 19 பேர் மீது கொலை வழக்குகள், 79 பேர் மீது கொலை முயற்சி வழக்கு, 52 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்கு உள்ளது. 2 பேர் மீது பலாத்கார வழக்கு உள்ளது.
அதில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் 51 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து ஆர்ஜேடி - 27, பாஜ - 22, காங்கிரஸ் - 20 ஐஜத - 11 பேரை களத்தில் இறக்கி உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,303 வேட்பாளர்களில் 27 சதவீதம் பேர் அதாவது 354 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்த தேர்தலில் 519 பேர் கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். அதில் ஜன் சுராஜ் - 86 பேர், ஆரஜேடி -59பாஜ -44ஐஜத-40காங்கிரஸ் -31 பேர் போட்டியிடுகின்றனர்.
அதில், லவுரியா தொகுதியில் விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் போட்டியிடும் ரன் கவுசல் பிரதாப் சிங் தான் கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.368.98 கோடி.
கடைசி இடத்தில், பிர்பனிடி தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் சுனில் குமார் சவுத்ரி சொத்து ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். வஜிர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் சுரேஷ் ராஜ்வன்ஷி தன்னிடம் ரூ.1,100 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் 528 பேர் தங்களது கல்வித்தகுதி 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எனத் தெரிவித்துள்ளனர்.67 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் முடித்துள்ளனர்15 பேர் டிப்ளமோ முடித்துள்ளனர். 9 பேர் படிக்கவில்லை.ஒருவர் கல்வித்தகுதி ஏதும் அறிவிக்கவில்லை.
வயதை பொறுத்தவரை 445 பேர் 25 முதல் 40 வரை உள்ளனர்170 பேர் தங்களின் வயது 61 முதல் 80 வயது வரை அறிவித்துள்ளனர். 2 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

