ADDED : நவ 07, 2025 01:08 AM

பீஜிங்:: சீனாவில் திருமணமான ஒருவர்: நம் அண்டை நாடான சீனாவின் ஹெனான் மாகாணத்தில், 'சியாலி ஹெல்ப்ஸ் யூ' என்ற 'டிவி' நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி சாதாரண மக்களின் தனிப்பட்ட குடும்ப பிரச்னைகள், நிதி சிக்கல்கள், சட்ட விவகாரங்களை தீர்த்து வைக்கும்.
பார்வையாளர்கள் தங்கள் பிரச்னைகளை தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் மூலம் பகிரலாம்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியை தொடர்பு கொண்ட, அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த லீ என்பவர், 20 ஆண்டுக்கு முன் பழகிய, மா என்ற தன் காதலியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று உதவி கேட்டிருந்தார்.
ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, மா என்பவருடன், லீ பழகியுள்ளார். கடந்த, 2001ல் தொழில் துவங்க லீக்கு அவர், ஒன்றரை லட் சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
ஆனால் குடும்ப சூழ்நிலையால், லீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும், மா உடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தற்போது வாங்கியக் கடனை திருப்பி அளிக்க விரும்புவதாகவும், மா எங்கிருந்தாலும் அவரைக் கண்டுபி டிக்க உதவும்படியும் அவர் கேட்டுள்ளார் .
லீயின் இந்த முயற்சிக்கு அவரது மனைவியும் முழு ஆதரவு அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சி சீனாவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

