தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/9 ஆயிரம் அடி உயரம் கீழ் இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; அவசர எச்சரிக்கை விடுத்த விமானி

9 ஆயிரம் அடி உயரம் கீழ் இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; அவசர எச்சரிக்கை விடுத்த விமானி

9 ஆயிரம் அடி உயரம் கீழ் இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; அவசர எச்சரிக்கை விடுத்த விமானி

1


ADDED : அக் 05, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 08:34 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஹீத்ரோவில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான போயிங் 777-200ER(G-VIIA) விமானம் சென்றது.

விமானம் கிளம்பிய சில மணி நேரங்களில் அயர்லாந்து வான்வெளியில், அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க துவங்கியது. 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த நிலையில் திடீரென 9 ஆயிரம் அடி உயரத்துக்கு வேகமாக கீழ் இறங்கியது.

உடனடியாக விமானி, சர்வதேச அவசரநிலை குறியீடான 7700 சிக்னலை பயன்படுத்தி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தார். பிறகு விமானத்தை மீண்டும் லண்டன் கொண்டு சென்றார். பயணிகளின் நலன் கருதி மீண்டும் லண்டன் திருப்பப்பட்டதாக தெரிகிறது.

விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏதும் கூறவில்லை

7700 அவசர எச்சரிக்கை

விமான போக்குவரத்தில் 7700 குறியீடு என்பது விமானம் அவசர நிலையை எதிர்கொள்கிறது என்பதை வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்பாகும்.

விமானி டிரான்ஸ்பாண்டரில்7700 என்ற குறியீட்டை உள்ளிடும்போது, அது வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் ரேடார் திரைகளில் தோன்றும். விமானத்திற்கு முன்னுரிமை அளித்தல் அல்லது பிற உதவி தேவைப்படலாம் என்பதை உடனடியாக உணர்த்தும் சிக்னல் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us