UPDATED : ஜன 03, 2025 05:02 AM
ADDED : ஜன 03, 2025 05:00 AM

பெர்ன்:முகத்தை மூடும்படியான, 'புர்கா' அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், அரசு எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், மக்களின் கருத்தைக் கேட்கும்; ஓட்டெடுப்பை நடத்தும்.
பொது இடத்தில் முகத்தை மூடும்படி எதையும் அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கடந்த 2021ல் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், 52 சதவீத மக்கள் ஆதரவு அளித்தனர்.
இந்த தீர்மானத்தில் முஸ்லிம்கள் குறித்து கூறப்படவில்லை; பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டம் கடந்தாண்டு நிறைவேறியது. இந்த சட்டம், 2025 ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த தடைக்கு, புர்கா தடை என்றே கூறப்படுகிறது. இந்த சட்டம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, பொது இடத்தில், தங்களுடைய முகத்தை மறைக்கும்படி, உடைகள், துணிகள் உள்ளிட்டவற்றை அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் சீதோஷ்ணம் ஆகிய சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், 86 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகையில், 5 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், அங்கு பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் துணியை அணிவதில்லை என கூறப்படுகிறது.

