எங்களிடம் எண்ணெய் வாங்குங்கள் ஐரோப்பாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
எங்களிடம் எண்ணெய் வாங்குங்கள் ஐரோப்பாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ADDED : டிச 22, 2024 12:15 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கிடையே பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தும் டிரம்ப், தன் அரசின் கொள்கைகள் எப்படி இருக்கும் என விளக்கி வருகிறார்.
சமீபத்தில் இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்தால், இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில், ஐரோப்பாவுடனான வர்த்தகம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவுடனான ஐரோப்பாவின் வர்த்தக பற்றாக்குறை இடைவெளி, மிகப்பெரிய அளவு உள்ளது. அதை குறைக்க அமெரிக்காவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய யூனியன் நாடுகள் வாங்க வேண்டும்.
இல்லையெனில், அதிக வரி விதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும்; நேட்டோ படைகளுக்கு வழங்கும் கூடுதல் நிதியை நிறுத்த நேரிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.