sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கனடா பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் திருநங்கை

/

 கனடா பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் திருநங்கை

 கனடா பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் திருநங்கை

 கனடா பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் திருநங்கை


ADDED : பிப் 13, 2026 01:16 AM

Google News

ADDED : பிப் 13, 2026 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெண் அல்ல ஒரு திருநங்கை என்பதும், அவர் வீட்டில் தாய் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் பெண் ஒருவர் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு ஆசிரியரும், 12 முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர். அருகில் உள்ள வீட்டில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். தாக்குதல் நடத்திய பெண், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியது, அப்பகுதியைச் சேர்ந்த ஜெஸ்ஸி வான் ரூட்ஸெலார், 18, என்பதும், அவர் ஒரு திருநங்கை என்பதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய அதே பள்ளியில் படித்த ஜெஸ்ஸி, நான்கு ஆண்டுக்கு முன்பு படிப்பை நிறுத்தியுள்ளார். மனநல பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், தன் தாய் மற்றும் சகோதரனையும் அவர் சுட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us