அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் மின் தடை நடுத்தெருவில் நின்ற கார்கள்
அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் மின் தடை நடுத்தெருவில் நின்ற கார்கள்
ADDED : டிச 22, 2025 12:08 AM
சான் பிரான்சிஸ்கோ:: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஏற்பட்ட மின்தடையால்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. வணிக வளாகங்கள், கடைகளில் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சான் பிரான்சிஸ்கோவின் துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மின் இணைப்பு சாதனங்கள் எரிந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்நகரின் வடக்கு பகுதி முழுதும் இருளில் Wமூழ்கியுள்ளது. மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட மின் தடையால் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

