விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு
விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு
UPDATED : அக் 09, 2024 03:41 PM
ADDED : அக் 09, 2024 03:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் ஒவ்வொறு துறையிலும் சிறந்த சேவையாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றுவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு ' புரதத்தை கட்டமைத்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.