டிட்வா புயலில் சிக்குண்ட இலங்கைக்கு கைகொடுத்த சீனா: 10 லட்சம் டாலர் நிதி உதவி
டிட்வா புயலில் சிக்குண்ட இலங்கைக்கு கைகொடுத்த சீனா: 10 லட்சம் டாலர் நிதி உதவி
ADDED : டிச 01, 2025 08:17 PM

பீஜிங்: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா 10 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து உதவி செய்திருக்கிறது.
வரலாறு காணாத பொருள் இழப்பையும்,உயிரிழப்பையும் டிட்வா புயலால் இலங்கை சந்தித்துள்ளது. புயல், மழைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 334 ஆக உயர்ந்துள்ளது. 350க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், கடும் சேதத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு சீனா கை கொடுத்துள்ளது. அந்நாட்டு தரப்பில் நிதியாக 10 லட்சம் டாலர்களை அளித்துள்ளது. இந்த நிதியை இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் சீனா வழங்கி உள்ளது.
முன்னதாக, இந்தியாவின் தரப்பில் இருந்தும் மனிதாபிமானம் அடிப்படையில் இலங்கைக்கு 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையும் ஈடுபட்டுள்ளது.

