சீனா ரூ.337 கோடி ஊழல் வழக்கில் 'மாஜி' அமைச்சருக்கு மரண தண்டனை
சீனா ரூ.337 கோடி ஊழல் வழக்கில் 'மாஜி' அமைச்சருக்கு மரண தண்டனை
ADDED : செப் 29, 2025 06:05 AM

பீஜிங்: தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 337 கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கில், சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக ஷீ ஜின்பிங் 2012ல் பதவிக்கு வந்ததில் இருந்து, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில், உயர் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இந்நிலையில், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து, 337 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான டாங் ரென்ஜி யனுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2007 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பல பதவிகளில் இருந்தபோது, அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உத்தரவை செயல்படுத்துவதை ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது. மேலும், சட்டவிரோதமாக பெற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.