sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்க புறப்பட்டது சீனாவின் 'ஷென்சோ - 22'

/

 விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்க புறப்பட்டது சீனாவின் 'ஷென்சோ - 22'

 விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்க புறப்பட்டது சீனாவின் 'ஷென்சோ - 22'

 விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்க புறப்பட்டது சீனாவின் 'ஷென்சோ - 22'


ADDED : நவ 26, 2025 05:57 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீனாவின், டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வர, 'ஷென்சோ -- 22' என்ற விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது.

அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்தை தவிர, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் தனி விண்வெளி நிலையங்களை வைத்திருக்கின்றன.

' டியாங்கோங்' என்று அழைக்கப்படும் சீன விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீரர்கள் செல்வது வழக்கம்.

அதன்படி, 'ஷென்சோ -- 20' விண்கலம் வாயிலாக கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்கள் பயணம் மேற்கொண்டனர்.

ஆனால், அவர்கள் திரும்பவேண்டிய விண்கலம் சேதமடைந்து பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், கடந்த 1ம் தேதி, 'ஷென்சோ -- 21' என்ற விண்கலம் மாற்று ஏற்பாடாக அனுப்பி வைக்கப்பட்டு மூவரும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

'ஷென்சோ -- 21' விண்கலம் மூன்று வீரர்களை, விண்வெளி நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு மூன்று வீரர்களை பூமிக்கு அழைத்து வந்தது. இதனால், ' டியாங்கோங்' விண்வெளி நிலையத்தில் தற்போது இருக்கும் வீரர்கள் பூமி திரும்புவதற்கு விண்கலம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரே மாதத்தில், 'ஷென்சோ -- 22' என்ற விண்கலத்தை சீனா உருவாக்கியது.

இந்த விண்கலம், நேற்று ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச்- 2எப்' ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.






      Dinamalar
      Follow us