டில்லியில் இரு பிரிவினர் மோதல்- துப்பாக்கிச்சூடு: 22 வயது இளம் பெண் காயம்
டில்லியில் இரு பிரிவினர் மோதல்- துப்பாக்கிச்சூடு: 22 வயது இளம் பெண் காயம்
ADDED : அக் 19, 2024 10:27 PM

புதுடில்லி: டில்லியில் இரு தரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 22 வயது இளம் பெண் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
தலைநகர் டில்லியின் வடகிழக்கு பகுதியில் வெல்கம் ஏரியா என்ற இடத்தில் இன்று இரவு 9:50 மணியளவில் (அக்.19) அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் ஒரு வீட்டில் பால்கனியில் நின்று கொண்டிருந்த 22 வயது இளம் பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதும், மொத்தம் 60 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதில் 22 வயது இளம் பெண் காயமடைந்துள்ளதும் தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.