மனித நேயத்துக்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டு பதிவு
மனித நேயத்துக்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டு பதிவு
UPDATED : ஜூலை 10, 2025 04:02 PM
ADDED : ஜூலை 10, 2025 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா: அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு தீர்ப்பாயத்தில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின் போது, போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஷேக் ஹசீனா நேரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்தார். இது குறித்த ஆடியோ இணையதளங்களில் கசிந்தது.
இந்நிலையில், நீதிபதி கோலம் மோர்டுசா மஜூம்தர் தலைமையிலான 3 நபர்கள் தீர்ப்பாயத்தில், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஜமன் கான் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி சவுத்ரி அப்துல்லா ஆகியோர் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது.