இத்தாலி பிரதமருடன் 'டேட்டிங்கா'? எலான் மஸ்க் மறுப்பு
இத்தாலி பிரதமருடன் 'டேட்டிங்கா'? எலான் மஸ்க் மறுப்பு
ADDED : செப் 25, 2024 10:15 PM

வாஷிங்டன்: இத்தாலி பிரதமர் மெலோனியுடன் 'டேட்டிங்' செய்வதாக பரவிய தகவலை 'எக்ஸ்' சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் ஜியார்ஜியோ மெலோனியும், எலான் மஸ்க்கும் கலந்து கொண்டனர். இதில், ஜியார்ஜியோ மெலோனிக்கு 'அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன்' விருதை எலான் மஸ்க் வழங்கினார்.
பிறகு அவர் பேசுகையில், '' வெளிப்புற அழகை விட உள்ளத்தால் இன்னும் அழகாக இருக்கும் ஒருவருக்கு விருதை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இத்தாலி பிரதமர் உண்மையானவர். நேர்மையானவர். உண்மையுள்ளவர்'' எனப்பாராட்டி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இருவரும் அருகருகே அமர்ந்த புகைப்படங்கள் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வைரலாகியது.
அதில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ' எலான் மஸ்க்கும், மெலோனியும் 'டேட்டிங்' செய்கின்றனரா?' எனக்கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ' நாங்கள் டேட்டிங் செய்யவில்லை' என பதிலளித்து இருந்தார்.
மற்றொரு பயனாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், ' நிகழ்ச்சியில் எனது தாயாருடன் பங்கேற்றேன். இத்தாலி பிரதமர் மெலோனியுடன் எந்த காதல் உறவிலும் இல்லை', என பதிலளித்துள்ளார்.