அவதூறு வழக்கு: டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
அவதூறு வழக்கு: டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
UPDATED : ஜன 27, 2024 11:46 AM
ADDED : ஜன 27, 2024 10:51 AM

வாஷிங்டன்: பொது வெளியில் அவமானப்படுத்தியதாக எழுத்தாளர் ஜூன் கரோல் தொடர்ந்த வழக்கில், டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயார்க் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட்டது.
டிரம்ப் கோபம்
நீதிமன்ற தீர்ப்பு அபத்தமானது எனவும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கரோல் மகிழ்ச்சி
ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொரு கொடுமைக்காரனுக்கும் மிகப்பெரிய தோல்வி என வழக்கை தொடர்ந்த எழுத்தாளர் ஜூன் கரோல் தெரிவித்துள்ளார்.

