முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
ADDED : மே 30, 2024 07:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக இன்று(30.05.2024) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த 02-ம் தேதி பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்தார்.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்ட் இன்று கலைக்கப்பட்டது. 650 எம்.பி.க்கள் பதவி காலியானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.