UPDATED : செப் 26, 2024 09:24 AM
ADDED : செப் 26, 2024 03:02 AM

கொழும்பு: ''இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை,'' என, இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்தார்.
நம் அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இடதுசாரி ஆதரவாளரான அவர், இலங்கையின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்றார்.
அதிபர் அனுரா குமார திசநாயகே கூறியதாவது:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நாங்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.
இரு நாடுகள் எங்களது மதிப்புமிக்க கூட்டணி நாடுகள். தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ், இந்தியா, சீனா ஆகியவை நெருங்கிய கூட்டணி நாடுகளாக மாறும் என, எதிர்பார்க்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக நாம் ஒரு திவாலான தேசமாக இருக்கிறோம். வறுமை அதிகரித்துள்ளது; அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதே என் முதல் பணி.
இவ்வாறு அவர் கூறினார்.

