தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சவுதி அரேபியாவில் புனித நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவில் புனித நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவில் புனித நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்


ADDED : நவ 16, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை குறித்து வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதலில் மக்கா பகுதியில் இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பிறகு மதீனா பிராந்தியத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு ட்ரோன்களையும் சவூதி வான் பாதுகாப்புப் படைகள் நடுவானிலேயே இடைமறித்து அழித்தன.

சவுதி படைகள் உஷாராக செயல்பட்டு, ட்ரோன் தாக்குதலை முறியடித்ததால், புனித நகரங்களில் உயிரிழப்புகளோ அல்லது கட்டிடச் சேதங்களோ ஏதும் ஏற்படவில்லை. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக சவுதி படைகள் குற்றம் சாட்டியது. புனித நகரங்களைக் குறிவைக்கவில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செய்தித் தொடர்பாளர் யஹ்யா மறுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us