sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அப்பாவி மக்கள் பலி: எகிப்தில் 700 போலீசார் அதிரடி நீக்கம்

/

அப்பாவி மக்கள் பலி: எகிப்தில் 700 போலீசார் அதிரடி நீக்கம்

அப்பாவி மக்கள் பலி: எகிப்தில் 700 போலீசார் அதிரடி நீக்கம்

அப்பாவி மக்கள் பலி: எகிப்தில் 700 போலீசார் அதிரடி நீக்கம்


ADDED : ஜூலை 14, 2011 05:33 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெய்ரோ: எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு காரணமாக இருந்த 700 போலீஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். எகிப்தில் அதிபர் முபாரக்கின் ஆட்சி அகற்றப்பட்டப்பின்னர் நேற்று, புதிய அரசியலமைப்பு வரையறுக்கப்பட்டது. இதற்கு வழிகாட்டியாக 100 பேர் கொண்ட அரசியல் நிர்ணய சபை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. எகிப்தி்ல் வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தகிரிர் சதுக்கத்தில் நடந்த வன்முறையில் தான் அதிகம்பேர் ‌கொல்லப்பட்டனர். அப்போது பணியாற்றிய உயர் போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் என 700 பேர் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய பிரதமர் ஈசாம் ஷெராப் கூறினார். அதன்படி 505 மேஜர் ஜெனரல்கள், உள்துறை அமைச்சகத்தின் 10 போலீசார்கள், 82 கர்னல்கள்மற்றும் 82 உதவி கர்னல்கள் என ஏறத்தாழ 700 போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 164 பேர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளனர்






      Dinamalar
      Follow us