அதிபராக பதவி வகிக்க தகுதியானவர்: கமலாவுக்கு டாக்டர்கள் சர்பிடிகேட்
அதிபராக பதவி வகிக்க தகுதியானவர்: கமலாவுக்கு டாக்டர்கள் சர்பிடிகேட்
ADDED : அக் 13, 2024 08:04 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது உடல்நலன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிபராக பதவி வகிப்பதற்கான மனநிலை அவருக்கு உள்ளது என அதில் டாக்டர்கள் சான்று அளித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும்(59), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும்(78) போட்டியிடுகின்றனர். இருவருக்கு இடையிலான போட்டி கடுமையாக உள்ளது. இந்நிலையில் கமலா ஹாரீஸ் சார்பில், மருத்துவ குழுவினர் அவரது உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை குறிப்பிடத்தக்கது. அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கமலா ஆதரவாளர்கள் கூறுகையில், 78 வயதாகும் டிரம்ப் தனது உடல்நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட மறுக்கிறார் என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கமலா ஹாரீஸ் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார்.
தற்போது , அதிக வயதான வேட்பாளர் டிரம்ப் தான் என்பதை எடுத்து காட்ட அவர் விரும்புகிறார். டிரம்ப்பை விட வயது குறைவு, போதுமான மன தைரியம் ஆகியவை இருப்பதை காட்ட முயற்சி செய்கிறார். இதன் மூலம் இதுவரை யாருக்கு ஓட்டுப்போடுவது என முடிவு செய்யாமல் உள்ள வாக்காளர்களை கவர முடியும் என கமலா ஹாரீஸ் நம்புகிறார். இவ்வாறு அவர்கள் உள்ளனர்.