3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக... ரூ.295 கோடியில் பண்ணை பங்களா வாங்கிய எலான் மஸ்க்
3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக... ரூ.295 கோடியில் பண்ணை பங்களா வாங்கிய எலான் மஸ்க்
ADDED : அக் 30, 2024 06:28 PM

டெக்ஸாஸ்: தனது குழந்தைகள், மனைவிகளுக்காக பங்களாவுடன் கூடிய பண்ணையை உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க். இவர் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் .
இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் உள்ளனர். முதல் ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்-க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இதில், முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, 3வது மனைவியுடன் ஷிவோனுடன் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார். ஷிவோன் ஷில்லிஸ், மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன் சேர்ந்து வாழும் வகையில், டெக்ஸாஸில் 14,400 சதுர அடியில் ரூ.295 கோடி மதிப்பில் பண்ணையை வாங்கியுள்ளார். 6 படுக்கையறைகளைக் கொண்ட பிரமாண்ட வீடும் அதில் அடங்கியுள்ளது.
இந்த சொத்து வாங்கியதை ரகசியமாக வைத்திருக்கும் மஸ்க், விற்பனையாளர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று ஒப்பந்தத்தையும் போட்டுக் கொண்டதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சொத்துக்களை தனக்கு விற்றவர்களுக்கு 20 முதல் 70 சதவீதம் வரையில் கூடுதலாகவும் அவர் பணத்தை கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனது குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கவே, மஸ்க் இந்த வீட்டை வாங்கியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.