எலான் மஸ்கின் 'ஸ்டார்ஷிப்' விண்கலம் புறப்பட்ட 8 நிமிடங்களில் வெடித்தது
எலான் மஸ்கின் 'ஸ்டார்ஷிப்' விண்கலம் புறப்பட்ட 8 நிமிடங்களில் வெடித்தது
ADDED : ஜன 18, 2025 12:03 AM

வாஷிங்டன்: 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின், மேம்படுத்தப்பட்ட, 'ஸ்டார்ஷிப்' விண்கலம், விண்ணில் பறந்த 8 நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், தங்கள் தயாரிப்பான, 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் வாயிலாக விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது.
அந்த வரிசையில், ஏழாவது சோதனையாக, 10 மாதிரி செயற்கைக்கோள்களுடன், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம், அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் இருந்து நேற்று முன்தினம் இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப்பின் பூஸ்டர் பகுதி பிரிந்து, திட்டமிட்டபடி ஏவுதளத்துக்கு திரும்பியது. ஆனால், பறக்கத் துவங்கிய ஸ்டார்ஷிப் விண்கலம், 8.50 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததுடன் வெடித்தும் சிதறியது.
இந்த விபத்து குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், 'வெற்றி நிச்சயமற்றது; ஆனால், பொழுதுபோக்கு உறுதி' என, குறிப்பிட்டுள்ளார். விண்ணில் வெடித்துச் சிதறிய விண்கலத்தின் பாகங்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அவ்வழியாகச் செல்லவிருந்த பயணியர் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
எரிபொருள் கசிவால் விபத்து நேர்ந்திருக்கலாம் என, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.