'பாக்.,கில் எனக்கு மரண தண்டனை அளிக்க முயற்சி': மார்க் ஜுக்கர்பெர்க் பகீர் தகவல்
'பாக்.,கில் எனக்கு மரண தண்டனை அளிக்க முயற்சி': மார்க் ஜுக்கர்பெர்க் பகீர் தகவல்
UPDATED : பிப் 12, 2025 05:19 PM
ADDED : பிப் 12, 2025 05:11 PM

வாஷிங்டன்: பாகிஸ்தானில், மதநிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, எனக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டது என மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது: பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. பேஸ்புக்கில் மதநிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர ஒருவர் முயன்றார். ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால், அந்த வழக்கை பற்றி நான் கவலைப்படவில்லை. உலகில் பல்வேறு நாடுகளில் கருத்து சுதந்திரம் என்பதற்கு வெவ்வேறான மதிப்பீடுகள் உள்ளன.
அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர். இதனை சிலர் சரி என கருதுகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும். இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க்
கூறினார்.