ADDED : ஜூலை 31, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் என, ஒரு சில நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இணைவதற்கு ஆஸ்திரேலியா முயற்சியை மேற்கொண்டது.
அந்த நாட்டின், 'கிளாமர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தின் வாயிலாக, 'எரிஸ்' என்ற உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ராக்கெட் நேற்று அனுப்பப்பட்டது. இது, அந்த நாட்டின் முதல் விண்வெளி முயற்சியாகும். ஆனால், 14 வினாடிகளில் வெடித்துச் சிதறியது. இது ஒரு வெற்றிகரமான துவக்கம் என்றும், அடுத்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என்றும் ராக்கெட்டை அனுப்பியுள்ள நிறுவனம் கூறியுள்ளது.