டென்மார்க் சிங்கம், புலிகளுக்கு உணவாக செல்லப் பிராணிகளை தாருங்கள்
டென்மார்க் சிங்கம், புலிகளுக்கு உணவாக செல்லப் பிராணிகளை தாருங்கள்
ADDED : ஆக 06, 2025 01:52 AM
கோபன்ஹேகன்:டென்மார்க்கில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்று, தங்களால் வளர்க்க முடியாத செல்லப்பிராணிகளை சிங்கம், புலி போன்ற வேட்டையாடும் விலங்குகளுக்கு உணவாக தரும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டது
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில், அதிக அளவில் இனப் பெருக்கம் ஏற்பட்டு போதிய இடமில்லாததால், 12 கினியா பபூன் வகை குரங்குகள் கொல்லப்பட்டன. இது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் ஓய்வதற்குள், மற்றொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஆல்போர்க்கில் உள்ள டேனிஷ் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கம், புலி போன்றவை வேட்டையாடும் வகையில், பொதுமக்கள் தங்களால் வீடுகளில் வளர்க்க முடியாத முயல்கள், பன்றிகள், கோழிகள், குதிரைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை உணவாக வழங்கும்படி அது கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக டேனிஷ் உயிரியல் பூங்கா, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாவது 'எங்களிடம் உள்ள வேட்டையாடும் விலங்குகளுக்கு இயற்கையான முறையில் உணவளிக்க விரும்புகிறோம். மாமிச உண்ணிகளுக்கான இயற்கை உணவுச் சங்கிலி முறையை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறோம்.
'உங்கள் வீடுகளில் வளர்க்க முடியாத செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றை தானமாக வழங்க தயங்காதீர்கள். எங்கள் ஊழியர்கள் அவற்றை, வேட்டையாடும் விலங்குகளுக்கு உணவாக அளிப்பர்' என தெரிவித்துள்ளது.