போர் விமான தொழில்நுட்பம்: பாக்., - அமெரிக்கா ஒப்பந்தம்
போர் விமான தொழில்நுட்பம்: பாக்., - அமெரிக்கா ஒப்பந்தம்
ADDED : டிச 12, 2025 05:05 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள எப்---16 போர் விமானங்களை நவீனப்படுத்துவதற்காக, 6,200 கோடி ரூபாய்க்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், அமெரிக்காவிடம் இருந்து எப் - 16 போர் விமானங்களை வாங்கியுள்ளது. இந்த போர் விமானங்களை நவீனப்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சேவைகளை, 6,200 கோடி ரூபாய்க்கு பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 334 கோடி ரூபாய்க்கு முக்கிய ராணுவ உபகரணங்கள் விற்கப்பட உள்ளன. மேலும், 5,865 கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் விற்கவும், பயிற்சி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி வரும் 2040ம் ஆண்டு வரை அமெரிக்கா தன் சேவைகளை பாகிஸ்தானுக்கு வழங்கும்.

