துண்டு மல்லிப்பூ சரத்துக்கு 1.14 லட்சம் ரூபாய் அபராதம்
துண்டு மல்லிப்பூ சரத்துக்கு 1.14 லட்சம் ரூபாய் அபராதம்
ADDED : செப் 09, 2025 07:02 AM

கான்பெரா: மலையாள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவுக்கு மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக 1.14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மலையாள சங்க ம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க, மலையாள ன் முன்னணி நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றார். கொச்சியில் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது தந்தை மல்லிகைப் பூவை வாங்கி கொடுத்திருந்தார் .
தந்தை வாங்கித் தந்த பூவை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை தன் தலையில் வைத்துக்கொண்ட நவ்யா, மற்றொரு பகுதியை தன் கைப்பையில் வைத்து எடுத்துச் சென்றார்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளில் இருந்து தாவரப் பொருட்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கைப்பையில் கொண்டு சென்ற ஒரு சிறிய துண்டு மல்லிகை சரத்துக்கு, 1.14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை, 28 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என, விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
நவ்யா நாயருக்கு சிறிய மல்லிகை சரத்துக்காக விதிக்கப்பட்ட அபராதம் வியப்பை ஏற்படுத்தினாலும், ஆஸ்திரேலியா அதன் உயிரியல் பாதுகாப்பு விதிகளை எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு ஆதாரமாக இது உள்ளது. அந்நாடு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை இது எடுத்துக்காட்டுகிறது.