இந்தோனேஷியாவில் பாமாயிலுடன் வந்த கப்பலில் தீ: 10 பேர் பலி
இந்தோனேஷியாவில் பாமாயிலுடன் வந்த கப்பலில் தீ: 10 பேர் பலி
ADDED : அக் 15, 2025 06:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பதாம் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பாமாயிலுடன் வந்த கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.
ரியாவு தீவில் உள்ள படாம் நகரில் இருந்த கப்பல் கட்டும் தளத்தில் பாமாயில் டாங்கருடன் வந்த கப்பலில் பராமரிப்பு பணி நடந்தது. டாங்கரில் பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த டேங்கர் வெடித்துச்சிதறியது.
இதன் காரணமாக, பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.