சீனாவில் 4 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ; 12 பேர் உடல் கருகி பலி
சீனாவில் 4 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ; 12 பேர் உடல் கருகி பலி
ADDED : டிச 10, 2025 12:43 PM

குவாங்டாங்: தெற்கு சீனாவில் 4 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் ஷாண்டோ பகுதியில் அமைந்துள்ள 4 அடுக்குகளைக் கொண்ட மாடி குடியிருப்பில் நேற்றிரவு 9.20 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் அரை மணிநேரம் கொளுந்து விட்டு எரிந்த இந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
இந்தத் தீவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
குவாங்டாங் மாகாணத்திற்கு அருகாமையில் உள்ள ஹாங்காங்கில் கடந்த மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 160 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயர் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வும், நடவடிக்கையும் சீன அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், குவாங்டாங் மாகாணத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

