UPDATED : நவ 15, 2024 10:48 PM
ADDED : நவ 15, 2024 10:29 PM

வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவரை அர்ஜென்டினா அதிபர் ஜாவீர் மெய்லி நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியின் டெனால்டு டிரம்ப் போட்டியிடு வென்றார். விரைவில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அர்ஜென்டினா அதிபர் ஜாவீர் மெய்லி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது புளோரிடாவில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிபராக தேர்வு பெற்ற டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்தார். டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக அவரை சந்தித்த முதல் நபர் இவர்தான் என கூறப்படுகிறது.
முன்னதாக அமெரிக்காவில் அரசியல் நடவடிக்கைக்கான முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜாவீர் மெய்லி பங்கேற்கிறார்.