விதிகளை கடைபிடியுங்கள்:இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
விதிகளை கடைபிடியுங்கள்:இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2026 11:57 PM
புதுடில்லி:'விதிகளுக்குக் கட்டுப்படுங்கள் அல்லது விசாவை இழப்பீர்கள்': அமெரிக்கச் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் 'அமெரிக்கச் சட்டங்களை மீறினால்' ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்கத் தூதரகம் எக்ஸ் வலை தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் சட்டங்களை மீறினாலோ, அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் விசா பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.
'விதிகளுக்குக் கட்டுப்படுங்கள், உங்கள் பயணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள். அமெரிக்க விசா என்பது ஒரு சிறப்புரிமை, அது ஒரு உரிமை அல்ல, என எக்ஸ் சமூக வலை தளத்தில் தெரிவித்து உள்ளது.
முன்னதாக கடந்த டிச.,15 ம் தேதி முதல் அனைத்து எச்-1 பி விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் ஆன்லைன் குறித்த ஆய்வு நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
மேலும்அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு தூதரகம் இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

