விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்
விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்
ADDED : ஆக 26, 2025 06:59 AM

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபரும், ஆறு முறை பிரதமராகவும் பதவி வகித்த வர் ரணில் விக்ரமசிங்கே. தன் பதவி காலத்தில் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இதுநாள் வரை பிரிந்திருந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கே கைது குறித்து பல்வேறு வகைகளில் ஆ லோசனைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதில் குறிப்பாக, முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் அதிபர்களான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, மஹிந்த ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்சே ஆகியோர் இணைந்து ஒன்றாக களமிறங்கியுள்ளனர்.