sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

/

ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

9


ADDED : பிப் 26, 2026 06:42 PM

Google News

9

ADDED : பிப் 26, 2026 06:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். நேற்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தார். இன்று அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கை சந்தித்தார். இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். இதன் பிறகு பிரதமர் மோடி, நெதன்யாகு முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதில் புதுமை, விவசாயம், கடல்சார் பாரம்பரியம், புவி இயற்பியல் ஆய்வு, மீன்வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, கல்வி , வணிகம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கையெழுத்தாகின.

இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது நெதன்யாகு கூறியதாவது: மோடியின் இந்த அற்புதமான பயணத்தில் அற்புதமான முடிவுகள் வந்துள்ளன. குறுகிய காலமாக இருந்தாலும், அசாதாரணமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடியின் உரைக்கு பிறகு, இஸ்ரேல் மக்களின் கண்கள் குளமானதை காண முடிந்தது.

கல்வி ஒவ்வொரு மாணவரையும் சென்றடையவும், அவர்களின் முழு திறனை அடையவும் உதவும் மென்பொருள் மற்றும் ஏஐ நம்மிடம் உள்ளன. முந்தைய காலங்களில் நம்மை கட்டுப்படுத்திய வரம்புகள் இனி நம்மை கட்டுப்படுத்துவது இல்லை. எதிர்காலம் புதுமை செய்பவர்களுக்கு சொந்தமானது. இஸ்ரேலும், இந்தியாவும் புதுமையில் குறியாக உள்ளன. நாங்கள் பெருமைமிக்க பண்டைய நாகரிகங்கள். கடந் காலத்தை பற்றி மிகுவும் பெருமைப்படுகிறோம். ஆனால் எதிர்காலத்தை கைப்பற்றுவதில் உறுதியாக நிற்கிறோம். அதை ஒன்றாக செய்ய முடியும்.விரைவில் ஜி2ஜி கூட்டத்தை இந்தியாவில் நடந்த முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்கான ஏற்பாடு நடக்கும்.

பிரதமர் மோடி கூறியதாவது: எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 9 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலுக்கு முதல்முறையாக வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருவது பெருமையாக உள்ளது.

நேற்று பார்லிமென்டின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. இதனை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியா இஸ்ரேல் இடையிலான நட்புக்கும் நான் அர்ப்பணிக்கிறேன். விரைவில் இரு தரப்பும் பரஸ்பரம் பயன் பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்ந்தத்துக்கு முழு வடிவம் கொடுக்கப்படும்.

முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் கூட்டணி அமைக்க முடிவு செய்ள்ளோம். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சி. சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளி துறையில் நமது பணியை இன்னும் அதிகரிப்போம். திறமைகள் நிறைந்த கிராமங்கள் உருவாக்க உழைப்போம். உலகத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதில் இந்தியாவும் இஸ்ரேலும் உறுதியாக உள்ளன.

உலகளாவிய குழப்பத்துக்கு மனிதநேயம் பழியாகிவிடக்கூடாது என்பதில் இந்தியா தெளிவான கொள்கையுடன் உள்ளது. காசா அமைதி திட்டம், அமைதிக்கான வழியை திறந்துள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us