தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்; சமரச பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்; சமரச பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு
ADDED : மே 07, 2024 08:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலேம்: இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் ராணுவத்தை காசாவில் இருந்து திரும்ப பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.