ADDED : ஜூலை 05, 2025 05:38 PM

காசா: '' இஸ்ரேலுடன் போரை நிறுத்துவது தொடர்பான திட்டத்துக்கு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளோம்,'' என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 நாட்கள் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் ஆலோசிக்கப்பட்ட வந்த நிலையில், அதற்கு நேர்மறையான பதிலை மத்தியஸ்தர்களிடம் கொடுத்துள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறை றித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

