ADDED : ஆக 04, 2025 02:31 AM
ஜெருசலேம் : ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர், தற்போது உடல் மெலிந்து நடமாடும் வீடியோவை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்; 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இவர்களில், எவ்யதார் டேவிட், 24, என்ற இஸ்ரேலிய பிணைக் கைதியின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இது ஜூலை 27ல் பதிவு செய்யப்பட்டது. அதில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். தனக்கான சவக்குழியை தானே தோண்டி வருவதாக அதில் அவர் கூறுகிறார்.
இது சர்வதேச அளவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எவ்யதார் டேவிட் குடும்பம், ஹமாஸ் பயங்கரவாதிகள் அவரை வேண்டுமென்றே பட்டினி போட்டு வாட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.