ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல்
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல்
ADDED : செப் 28, 2024 02:08 PM

பெய்ரூட்: லெபனானில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
லெபனானின் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நேற்று இரவு நஸ்ரல்லா மறைவிடத்தை தாக்கியதாக, இஸ்ரேல் அறிவித்தபோது, 'அவர் நலமுடன் இருப்பதாக' ஹிஸ்புல்லா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நஸ்ரல்லா?
* 1992ம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஆக பதவி வகித்தார் நஸ்ரல்லா.
* 1.5 லட்சம் ராக்கெட் ஏவுகணை கொண்ட பெரும் ராணுவப்படையின் தலைவர் ஆவர்.