இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்
ADDED : நவ 11, 2024 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: இஸ்ரேல் மீது இன்று ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டு தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று இஸ்ரேலின் வடக்கே ஹய்பா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியாக 90 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் கார்கள், மற்றும் பிற வாகனங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர்.