பாக்.,கில் ஹிந்து அமைச்சர் மீது தாக்குதல்: பிரதமர் கண்டனம்
பாக்.,கில் ஹிந்து அமைச்சர் மீது தாக்குதல்: பிரதமர் கண்டனம்
ADDED : ஏப் 20, 2025 03:49 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஹிந்து அமைச்சர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த கேல் தாஸ் கோஹிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அமைச்சர் காரின் மீது தாக்குதல் நடத்தினர். தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை கார் மீது வீசினர். இதில் அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஷெபாஸ் ஷெரீப், மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

