sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டிரம்ப்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது எப்படி?

/

டிரம்ப்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது எப்படி?

டிரம்ப்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது எப்படி?

டிரம்ப்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது எப்படி?

1


ADDED : மார் 02, 2025 12:00 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிரம்ப், ஜெலன்ஸ்கி பேச்சின் முதல் 40 நிமிடங்கள் சுமுகமாக நடந்தது. கடைசி 10 நிமிடத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் தலையிட்ட பிறகு சூடு ஏறியது.

வேன்ஸ்: கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கு வேறு அதிபர் இருந்தார். அவர் புடின் குறித்து கடுமையாக விமர்சித்தார். அதன் பிறகே புடின் உக்ரைனுக்குள் நுழைந்தார். சேதப்படுத்தினார். டிரம்ப் அதுபோல பொறுப்பின்றி எதுவும் பேசாமல், போரை நிறுத்த நேர்மையான முயற்சிகளை எடுக்கிறார். அதை உங்களுக்கு பாரட்ட தோன்றவில்லை.

ஜெலன்ஸ்கி: கடந்த அதிபரின் காலம் இல்லை, 2014ல் இருந்தே இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது. ஒபாமா, டிரம்ப் இருந்து, அதன் பிறகுதான் ஜோ பைடன் வந்தார். அப்போது அமெரிக்கா என்ன செய்தது? நீங்கள் கூறும் துாதரக வாயிலான பேச்சு என்பதற்கு என்ன அர்த்தம்?

வேன்ஸ்: துாதரக ரீதியிலான பேச்சு என்பது, உங்களுடைய நாட்டில் பேரழிவை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி. நீங்கள் பழைய புகார்களை இங்கு பத்திரிகையாளர்கள் முன் கூறுவது, அதிபர் டிரம்பை அவமதிக்கும் செயலாகும். தற்போது உங்களுக்கு போரில் போரிட போதுமான வீரர்கள் இல்லை. இந்த நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஜெலன்ஸ்கி: எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள். போரில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

வேன்ஸ்: நீங்கள் ஏதோ பிரசார நோக்கத்துடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதில் பிரச்னை உள்ளது. போரை நிறுத்தி, உங்களுடைய நாட்டில் பேரழிவை தடுக்க நினைக்கும் அமெரிக்காவை அவமதிக்க முயற்சிக்கிறீர்கள்.

ஜெலன்ஸ்கி: போர் வந்தால் எந்த நாட்டுக்கும் முதலில் பிரச்னைகள் இருக்கும். உங்களுக்கு இரு பக்கமும் பெருங்கடல் உள்ளது. அதனால், இதுபோன்ற பிரச்னையை பார்த்திருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு நிலையை நீங்களும் சந்திக்க நேர்ந்தால், அதன் வலி தெரியும்.

டிரமப்: நாங்கள் அதுபோன்ற ஒரு நிலையை சந்திப்போம் என்று எப்படி கூறுகிறீர்கள். உங்களுடைய பிரச்னைக்கு தீர்வு காண நினைக்கிறோம். எங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்னை வரும் என்று எப்படி கூறலாம்?

ஜெலன்ஸ்கி: நான் அப்படி கூறவில்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்.

டிரம்ப்: எங்களுக்கு உத்தரவு போடும் இடத்தில் நீங்கள் இல்லை. உங்கள் மோசமான நிலைக்கு நீங்களே காரணம். லட்சக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்த, உங்களுக்கு உதவிய நாட்டை அவமதிக்கிறீர்கள்.

வேன்ஸ்: ஒருமுறையாவது நன்றி கூறியிருக்கிறீர்களா?

ஜெலன்ஸ்கி: பலமுறை கூறியுள்ளேன். இன்றும் கூறினேன். நீங்கள் உரத்த குரலில் பேசினால் பணிந்து விடுவோம் என்று நினைக்கிறீர்களா?

டிரம்ப்: அவர் உரத்த குரலில் பேசவில்லை. உங்களுடைய நாடு பெரும் பிரச்னையில் உள்ளது.

ஜெலன்ஸ்கி : நான் பதில் சொல்லலாமா?

டிரம்ப் : முடியாது, நீங்கள் ஏற்கனவே நிறைய பேசிவிட்டீர்கள். எங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே, நீங்கள் போரில் இருந்து தப்பிக்க முடியும்.

ஜெலன்ஸ்கி : நாங்கள் வலுவாக உள்ளோம். உங்களுக்கு நன்றி.

டிரம்ப் : நாங்கள் ஆயுதங்கள் வழங்காமல் இருந்தால், இரண்டு வாரங்களிலேயே போர் முடிவுக்கு வந்திருக்கும்.

ஜெலன்ஸ்கி : மூன்று நாட்களில் முடிந்திருக்கும் என்று புடின் கூறியுள்ளார்.

டிரம்ப் : அதற்கும் முன்னதாக முடிந்திருக்கும். இப்படி பேசினால், நான் கடுமையாகி விடுவேன். உங்கள் நாடு சீரழிந்து வருகிறது. ஆனாலும், போர் நிறுத்தத்துக்கு தயாராக இல்லை என்று கூறி வருகிறீர்கள். இப்போது கூட, போர் நிறுத்தத்துக்கு தயார் என்றால், அடுத்த நிமிடமே, உங்கள் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படும்.

ஜெலன்ஸ்கி : போர் நிற்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அதற்கு உத்தரவாதம் வேண்டும்.

டிரம்ப் : உங்களுக்கு போர் நிறுத்தம் வேண்டுமா, உத்தரவாதம் வேண்டுமா?

ஜெலன்ஸ்கி : எங்கள் மக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று.

டிரம்ப் : இந்த கதையெல்லாம் ஜோ பைடனிடம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜெலன்ஸ்கி : அவர் உங்கள் நாட்டின் அதிபராக இருந்தவர்.

டிரம்ப் : இருந்தார்; இப்போது இல்லையே. அமெரிக்கா இல்லாமல், உக்ரைன் வலுவாக இருக்க முடியாது. போரை நீங்கள் தொடரலாம். ஆனால், அதில் வெற்றி கிடைக்காது. உங்களிடம் எதுவும் இல்லை. உங்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால், உங்களுக்கு உதவும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இல்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.

இவ்வாறு வாதம் நடந்தது.

இரண்டு நாடுகளின் அதிபர்கள் இடையே இவ்வாறு காரசாரமாக வாக்குவாதம் நடந்ததும், அது அப்படியே நேரலை செய்யப்பட்டதும் உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்கின்றனர்.






      Dinamalar
      Follow us