நஸ்ரல்லாவை கொல்ல உத்தரவு கொடுத்தேன்: உறுதிபடுத்தினார் இஸ்ரேல் பிரதமர்!
நஸ்ரல்லாவை கொல்ல உத்தரவு கொடுத்தேன்: உறுதிபடுத்தினார் இஸ்ரேல் பிரதமர்!
ADDED : செப் 29, 2024 08:19 AM

பெய்ரூட்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, ஒழிப்பதற்கான, நடவடிக்கைக்கு தான் தனிப்பட்ட முறையில், அங்கீகாரம் அளித்ததாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள டஜன் கணக்கான, ஹிஸ்புல்லா தளங்களை, இஸ்ரேல் விமானப்படை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியது. இதில் அந்த அமைப்பின் தலைவர் 64 வயதான நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசுகையில்,
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள், தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டைகள் மீது ஒரே இரவில் குண்டு வீசின. பல குடியிருப்பு கட்டிடங்களை தரைமட்டமாக்கின.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில், நஸ்ரல்லாவின் மரணம் ஒரு முக்கியமான சாதனை. இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு படி ஆகும்.
நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் டஜன் கணக்கான பிரெஞ்சுக்காரர்கள் உட்பட எண்ணற்ற இஸ்ரேலியர்கள் மற்றும் பிற நாடுகளின் பல குடிமக்களின் கொலைக்கு காரணமான ஒருவரை தீர்த்துவிட்டோம்.
இனி உலகில் அச்சுறுத்தல் இருக்காது.நாங்கள் ஒன்றாகப் போராடுவோம், கடவுளின் உதவியால், நாங்கள் ஒன்றாக வெல்வோம்.எங்கள் குடிமக்களை, அவர்களின் வீடுகளுக்குத் திரும்பவும், கடத்தப்பட்ட அனைவரையும் மீட்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அவர்களை ஒரு கணம் கூட மறக்க மாட்டோம்.
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார்.